ராஜஸ்தானில் ஆட்டுக்கிடாய் ஒன்று தினமும் பால் கொடுக்கும் அதிசய சம்பவம் நடந்துள்ளது.

அனைத்து ஜீவராசிகளிலும் பெண்களே பால் கொடுக்கும் தன்மை பெற்றிருப்பார்கள்.

ஆனால் ராஜஸ்தானில் ஆட்டுக்கிடாய் ஒன்று பால் கொடுக்கிறதாம், இதுகுறித்து அதன் உரிமையாளர் கூறுகையில், இரண்டரை மாதமாக இருக்கும் போது இந்த ஆட்டுக்கிடாயை வாங்கினேன்.

நாளடைவில் அதற்கு பால்வடி வருவதை கவனித்தோம், தற்போது ஒருநாளைக்கு 250 மிலி வரை பால் கொடுக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விலங்குகள் நல மருத்துவர் கியான் பிரகாஷ் சக்சேனா, ”எப்போதும் தாயின் உடலில் ஆண், பெண் பாலின ஹார்மோன்கள் சம அளவில் இருக்கும்.

இதுதான் ஆண், பெண் உறுப்புகளைத் தீர்மானிக்கிறது. இந்த ஆட்டுக்கிடாயில் ஹார்மோன் சமநிலை குலைவினால் இப்படி ஆகியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த அரிதான சம்பவத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here