தண்ணீர் கேட்டு குழந்தையை கடத்த முயன்ற திருடர்களை தாய் தூரத்தி பிடித்து மீட்ட சம்பவம் சிசிடிவி காமெராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.

டெல்லியில் உள்ள ஷகர்பூர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் தனது குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டுபேர் உஷாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

இருவரும் தலை கவசம் அணிந்திருந்ததால் வந்தவர்கள் யார் என்று உஷாவால் அடையாளம் காணமுடியவில்லை.

இந்நிலையில், தண்ணீர் எடுப்பதற்காக உஷா வீட்டிற்குள் சென்றபோது அந்த நபர்கள் உஷாவின் குழந்தையை கடத்திக்கொண்டு, பைக்கில் செல்ல முயற்சித்தனர்.

இதனைக்கண்ட உஷா அதிரடியாக அந்த நபர்களுடன் போராடி தனது குழந்தையை மீட்டுள்ளார்.

மேலும், கடத்த வந்த நபர்கள் இருவரும் ஒன்றும் தெரியாததுபோல் அங்கிருந்த நகர முயற்சித்தபோது அந்த பகுதி மக்கள் அவர்களை சுற்றிவளைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் குழந்தையை கடத்தியது குழந்தையின் தாய் மாமன்தான் என்பதும், 30 முதல் 35 லட்சம் வரை தனது சகோதரியின் வீட்டில் இருந்து பணம் பறிக்க போடப்பட்ட திட்டம் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குழந்தையை கடத்த முயற்சித்தபோது அந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானநிலையில் தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், குடும்பத்தாரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here