சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பார்வையற்ற நபருக்கு உதவி செய்வதற்கு மூச்சிரைக்க ஓடி வந்து பேருந்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த பெண்ணிற்கு கிடைத்த இன்ப அதிர்ச்சியால் கண்ணீர் சிந்தி தனது மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளாராம்.

அந்த பெண்ணின் பெயர் சுப்ரியா. இவர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.

இவர் ஆலுக்காஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் நிலையில், அவரது பெருந்தன்மையை பாராட்டி ஆலுக்காஸ் குழுமத் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் வீடு தேடி வந்து சுப்ரியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து, திருச்சூரில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு கூறி சென்றுள்ளார்.

அங்கு அவரைப் பாராட்டி புதிய வீடு வழங்கப்படும் என ஜாய் ஆலுக்காஸ் தெரிவித்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here